சமாஜ் சமூகம் திட்டத்தில் சேருங்கள்

உங்கள் மாநிலத்தை /யூனியன் பிரதேசத்தை தேர்ந்தெடுங்கள்

சமூகம் 3.5%

சிறிய முயற்சிகளால் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும். ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த மக்களில் 3.5% பேர் முயன்றாலே அந்த மாற்றத்தை செயலாக்க இயலும். மாற்றம் என்பது சிறந்தது அது எவ்வளவு சிறியது என்றாலும்

விதி என்பது என்ன?

விதி என்பது என்ன?

3.5% விதியின் கூற்றின் படி, ஒரு சமூகத்தில் அரசியல் அல்லது சமூக மாற்றத்தை வன்முறையற்ற முறையில் கொண்டு வரும் திறன் அச்சமூகத்தின் 3.5 சதவித மக்களிடமே உள்ளது.

சமூகத்தில் பின்தங்கிய குடும்பத்திற்கான உரிமைகள் மற்றும் உரிய நலத்திட்டங்களை அக்குடுபத்தினருக்கு சென்றடையச்செய்து அவர்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்க நீங்களும் உதவலாம்.

உங்களின் சிறிய முயற்சிகளின் தாக்கத்தை அறிந்துகொள்ள தள்ளுங்கள்

தள்ளுங்கள்

2050 இல் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பாதிக்கப்படக்கூடிய குடும்பத்தையும் வறுமையிலிருந்து மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்

எப்படி என்பதை இங்கே பாருங்கள் picture of arrow pointing towards the YouTube video

3.5% மக்கள் நீடித்த மாற்றத்தை எவ்வாறு கொண்டு வர இயலும் என்பதை பாருங்கள்

Become part of Samaaj 3.5%

ஃபுலே அம்பேத்கர் பெல்லோஷிப்

ஃபுலே அம்பேத்கர் பெல்லோஷிப் (PAF) என்பது சமூக நீதி மற்றும் பொதுக் கொள்கையின் இணையினில்  நம்பிக்கை கொண்ட நபர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாகும். இதில் நிறுவனத்தில் பல பிரிவுகளில் பொறுப்புகள் ஏற்க முடியும் , இதன் மையத்தில் கள அனுபவத்துடன் ஒரு தனிநபர் திறன்மிகு திட்டங்களை மேற்கொள்ள முடியும். இதன் விளைவாக இண்டஸ் ஆக்ஷனின் பணியில் நீண்டகால தலைமைப் பாத்திரங்கள் சாத்தியமாகும். பெல்லோஷிப்பின் கவனம் கொள்கை/ அரசு திட்டங்களை  அமலாக்கத்தில் இருக்கும் (நலன்புரி உரிமைகள் மற்றும் உரிமைகளின் போர்ட்ஃபோலியோ).

இந்த பெல்லோவ்ஷிப் மூலம் கொள்கை/திட்டம்-அமுலாக்க நிறுவனத்தை பற்றிய புரிதலை உருவாகும் வாய்ப்பை பெற இயலும். கூட்டுறவு பிரிவு, தொழில்நுட்பம் மற்றும் நிறுவன மேம்பாடு ஆகியவற்றில் பொதுவான திறன்களை வளர்ப்பதற்கும் இது வாய்ப்பாக அமையும் . பூலே அம்பேத்கர் பெல்லோஷிப் என்பது 12 மாத முழுநேர அர்ப்பணிப்பு ஆகும். நீங்கள் அந்தந்த மாநிலத்தில் சமாஜ் (சமூகம்) செயல்பாடுகளை வழிநடத்த ஒரு செயல்பாட்டுக் குழுவுடன் மற்றும் ஒரு முக்கிய நபராக ஒரு உள் முதுகெலும்பு செயல்பாடுகளில் (வியூகம் மற்றும் கற்றல் (ஆராய்ச்சி), நிதி திரட்டுதல், மனித வளம் போன்றவை) இணைக்கப்படுவீர்கள். பெல்லோஷிப் பதவிக்காலத்திற்குப் பிறகு, செயல்திறன் மதிப்பீடு மற்றும் நிறுவனத்தின் தேவைகளின் அடிப்படையில், இண்டஸ் ஆக்‌ஷனுடன் முழு நேரப் பாத்திரத்திற்கு (மாநில அல்லது செயல்பாட்டு) பணிபுரிய  உங்களுக்கு வாய்ப்பு இருக்கலாம்.

Close

Champions Programme

டிசம்பர் 2020 இல் தொடங்கப்பட்ட, சமாஜ் 3.5% திட்டம் என்பது, இந்தியா முழுவதும் தன்னார்வ வலையமைப்பை உருவாக்க, தனிநபர்கள் தங்கள் சமூகங்களுக்குள் உள்ள சமூகப் பிரச்சினைகளுக்கு வாதிடுவதற்குத் தயார்படுத்துவதற்கான  இண்டஸ் ஆக்ஷனின் முன்முயற்சியாகும். இந்த திட்டம் சட்டமியற்றும் உரிமைகள் மக்களை சமமாக சென்றடைய வேண்டும் என்று நம்பும் குடிமக்களை நாடுகிறது. 6-மாத கால அனுபவமிக்க கற்றல் பாடத்திட்டத்தின் மூலம், இந்தத் திட்டம் அதன் சமூகம் மற்றும் குடிமைச் சாம்பியனுக்குத் திறன்கள் மற்றும் மதிப்புகளில் பயிற்சி அளிக்கிறது. சாம்பியன்ஸ் மாநில அணிகள், கூட்டாளர் நிறுவனங்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் பயனாளிகளுடன் நெருக்கமாக இணைந்து அரசாங்கத் திட்டங்களின் கடைசி மைல் டெலிவரியை உறுதிசெய்கிறார்கள்.

Close

சந்தேகங்கள் இருக்கிறதா?

திட்டம் நிகழும் நகரத்தில் நான் இருக்க வேண்டுமா?

நீங்கள் சமூக சாம்பியனாக இருந்தால் திட்டம் நிகழும் நகரத்தில் இருக்க வேண்டும். சிவிக் சாம்பியனாக இருந்தால் அந்த நகரத்தை பற்றிய புரிதல் நன்கு இருந்தால், தொலைவில் இருந்து பணி புரியலாம். முரை சமாஜ் (சமூகம்) 3.5% மூன்று மாநிலங்களில் செயல்படுத்தப்படுகிறது: சட்டிஸ்கர், டெல்லி மற்றும் தமிழ்நாடு.

சிவிக் அல்லது சமூக சாம்பியனாக என்னிடம் என்ன எதிர் பார்க்கப்படுகிறது?

சமூகத்தில் பின்தங்கிய குடும்பத்திற்கான உரிமைகள் மற்றும் உரிய நலத்திட்டங்களை அக்குடுபத்தினருக்கு சென்றடையச்செய்து அவர்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்க நீங்கள் பணி புரிய வேண்டும்.

சிவிக் மற்றும் கோம்முநிட்டி சாம்பியனிடம் என்ன திறன்கள் எதிர்பார்க்கப்படுகிறது?

சமூகங்களுடனான நல்ல தொடர்பு, எழுத படிக்கும் திறன், உள்ளூர் மற்றும் அரசும் நிர்வாகம் பற்றிய புரிதல் மற்றும் ஸ்மார்ட்பபோன் பயன்படுத்தலின் அடிப்படை புரிந்தல்

என்னுடைய கற்றல் மற்றும் வளர்ச்சி பாதை இந்த 6 மாதத்தில் எவ்வாறு இருக்கும்?

இண்டஸ் அச்டின் உங்கள் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு வழி வகுக்கும். சட்டமியற்றும் உரிமைகள் பற்றிய நல்ல புரிதலை வளர்த்துக்கொள்ளவும், சமூக ஈடுபாட்டிற்கான திறன்களை வளர்த்துக்கொள்ளவும், சமூக தொழில்முனைவோராக ஆவதற்கான அவர்களின் பயணத்தில் உதவவும், சாம்பியன்களுடன் நாங்கள் பணியாற்றுவோம். சாம்பியன்களின் கற்றல் மற்றும் மேம்பாட்டிற்காக வாராந்திர தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பமற்ற அமர்வுகளை நடத்துவோம்.

ஆறு மாத முடிவில் என்னவாகும்?

6 மாதங்களின் முடிவில், இண்டஸ் ஆக்ஷனின் அனுபவச் சான்றிதழ் உங்களுக்கு வழங்கப்படும். இண்டஸ் ஆக்ஷனின் விதை நிதியுதவிக்கு தகுதியுடைய முன்மொழிவுகளை உருவாக்க சாம்பியன்களுக்கு நாங்கள் வாய்ப்புகளை வழங்குவோம், மேலும் மற்ற சிவில் சமூக அமைப்புகளுடன் இணைந்து பணியாற்ற சாம்பியன்களுக்கு உதவுவோம்.

நான் 6 மாதங்களுக்கு முன் திட்டத்தை விட்டு வெளியேற விரும்பினால் என்ன செய்வது?

திட்டம் முடிவதற்குள் சாம்பியன்கள் வெளியேறுவதை நாங்கள் ஊக்கப்படுத்த மாட்டோம். விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டுமே இது பரிசீலிக்கப்படும், மேலும் சிலர் 6 மாதங்கள் முடிவதற்குள் வெளியேற விரும்பினால், அனுபவச் சான்றிதழ் வழங்கப்படாது.

இந்த திட்டத்திற்கு நான் எவ்வளவு நேரம் செலவு செய்ய வேண்டும்?

ஒவொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை சாம்பியன்கள் பணிபுரிவார்கள். சமூக சாமியோனாக சேர்ந்தால் ஒரு நாளைக்கு 5-6 மணி நேரம் செலவு செய்ய வேண்டும். சிவிக் சாம்பியனாக சேர்ந்தால் 1.5- 2 மணி நேரம் செலவு செய்ய வேண்டும்

தாக்கம்

0

தன்னார்வலர்கள்

0

ஆய்வுகள்

0

கோவிட் - தொலைபேசி அழைப்புகள்

0

சிறப்பு தேவைகள் கொண்ட குழந்தைகளின் பள்ளிச் சேர்க்கைகள்

புதுப்பிப்புகள்

எங்கள் சாம்பியன்கள்

சாம்பியன்கள் பற்றி அறிந்துகொள்ள அவர்களின் படத்தை அல்லது பெயரை கிளிக் செய்யவும்

The 3.5%

சமாஜ் 3.5% குழுவில் தங்கள் சமூகத்தில் மாற்றத்திற்காக ஆர்வமுள்ள அர்ப்பணிப்புள்ள குடிமக்கள் உள்ளனர். ரேஷன் விநியோகம் செய்ய அல்லது கோவிட் அவசரநிலைகளுக்குப் பதிலளிப்பதற்காக மைல்கள் பயணம் செய்தாலும் அல்லது நெருக்கடிக்கு பதிலளிக்க ஒரு சமூகத்தை சித்தப்படுத்தினாலும், எங்கள் குழு அதன் உறுப்பினர்களுக்கு சேவை செய்வதன் மூலம் அவர்களின் சமூகங்களில் மாற்றத்தை கொண்டு வர எப்போதும் தயாராக உள்ளது.

வழிகாட்டிகள்

முதல் குழு

இரண்டம் குழு

எங்கள் பங்குதாரர்கள்

சமாஜ் 3.5% என்பது செயலாக்கமுள்ள குடிமை மற்றும் சமூகம் வழிநடத்தும் மாற்றத்தில் நம்பிக்கை கொண்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் கூட்டு அமைப்பாகும். இந்த நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ளும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை எங்களுடன் கைகோர்க்க ஊக்குவிக்கிறோம். எங்களுடன் இணைய 

பொருத்தமான தலைவர்களுடன் எங்களை இணைக்கலாம் 

கற்றல் மற்றும் மேம்பாட்டு பாடத்திட்டத்தை உருவாக்குவதில் எங்களுடன் கூட்டுசேரலாம் .

ஒரு சாம்பியனாக தன்னார்வத் தொண்டு செய்யும் அழைப்பை ஏற்கலாம்